பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 பாரில்ல். எவ்வளவு நெடுந்தொலைவிலிருந்தாலும், குறைந்தது 2 மாதங்களுக்கு ஒரு முறையாவது உயர் நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியரைக் கலந்து ஆலோ சிக்க வழி வகை செய்து கொள்ள வேண்டும். இத் தொடர்பினுல், உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் கள். தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களைப் புரிந்துகொள்ளவும், தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் கள், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் ஆலோசனையை யும் உதவியையும் பெறவும் வழி ஏற்படுகிறது. மேலும், இரு பிரிவு ஆசிரியர்களுக்குமிடையே நட்பும் நம்பிக் கையும் வளரும். ஆசிரியர் அத்தனே பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போன்று, நல்ல அண்ணன் தம்பிகள் போன்று பணியாற்றுகிற நிலையும் உருவாகும். ஆண்டுத் தொடக்கத்தில் உயர்நிலைப்பள்ளியில் சேரவரும் மாணவர்களேக் கண்டு உயர்நிலைப்பள்ளிகள் மிரளும் நிலை இருக்காது. அதோடு தங்கள் முந்தைய அனுபவத் தைக் கொண்டு எந்தப் பள்ளியில் எந்த மொழி அல்லது பாடம் அதிக கவனம் பெற வேண்டும் என்பதைக் கால காலத்தில் சொல்லி முழுப்பயனும் உண்டாவதற் கான வழிகளேக் கூறவும் முடிகிறது. ஆகவே தொடக்கப்பள்ளிகளிலிருந்து வரும் மாணவர்களே அவர் கள் தயக்கமின்றி எற்றுக் கொள்வார்கள். மேலும், மாணவர்களேச் சேர்க்கவரும் காலத்தில் மட்டும் இவ்வாறு கூறினுல், "சேர்க்காமல் தள்ளிவிடுவதற்காக ஒரு சாக்குச் சொல்லுகிருர்கள்' என்று மிரளுகிறவர்கள்கூட