பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 உடல் நலமும் உடல் வலிவும் எக்காலத்திற்கும் எந்நாட்டவர்க்கும் தேவை. எனினும் இத்தலே முறைக் கும், சிறப்பாக நம் நாட்டிற்கும் அதிகம் தேவை. ஏன் ? சில நூறு ஆண்டுகளின் தேக்கத்திற்குப்பின், சென்ற சில ஆண்டுகளாக, பல்வேறு துறைகளிலும் பல முன்னேற்றங்களையும் சாதனேகளையும் கண்டு. இன்று சுதந்திர இந்தியா வெற்றி நடை போடுகிறது. இதோடு, நிற்காமல் மேலும் வளர, முன்னேற திட்டமிட்டுப் பணி புரிகிருேம். இப்பெரும் பொறுப்பில் பங்கு கொள்ளும் இந்தியர் எல்லோருக்கும் - இளையோராயினும் முதியோ ராயினும் - உடல் ஊக்கமும் உடல் நலமும் இருந்தால் ம ட் டு ேம, எதிர்பார்க்கும் முன்னேற்றத்தைப் பெறலாம். இத்தகைய உடல்நலமும் உடல் ஊக்கமும் தொடர்ந்த பயிற்சியால் விளைவன. பலவகை உடற் பயிற்சிகளின் தேவையை வற்புறுத்திக் காட்டவே ‘தேசிய விளையாட்டு வாரம் கொண்டாடப்படுகிறது. இவ்வாரத்தில் நம்நாட்டில் சிற்றுார்களிலும் நகரங் களிலும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் உடல்நலம் பேணும் விளையாட்டுகளில் பங்குபெற வேண்டும் என்பது நம் நோக்கம். இத்தகைய பங்கு இந்த ஒரு வாரத்தோடு நிற்கக்கூடாது. விளையாட்டை மறந்தவர்களுக்கு அதைப் புதுப்பித்துக் கொடுக்கவே இவ்வாரம் துணை செய்யும். இத்தகைய விளையாட்டுகளின் மூலம் மக்க ளின் உடல்வலிமை, தாக்குப்பிடிக்கும் திறன், செய லாற்றும் திறன், ஆகியவற்றை வளர்க்க முடியும். ஒருவனுடைய ஆளுமையில் அறிவு வளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சிகளோடு உடல்வலிமையும் இடம் பெறுகின்றது.