பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இவ்விளையாட்டுகள் மிக முக்கியமானவை என்று கருதினர். ஆகவே, போரில் ஈடுபட்ட காலங்களிலும் இவ்விளேயாட்டுகளுக்காக, போரை நிறுத்திவைப்பர். நாடு முழுவதிலும் அமைதி நிலவச்செய்வர். இவ் வியோட்டுகளேப்பற்றி நாடு முழுவதும் முரசறைந்து அறி விப்பர் * ஒலிம்பிக் விளையாட்டுகளில், ஒட்டப்பந்தயம், தாண்டும் பந்தயம், எறியும் பந்தயம், குதிரையேற்றம், மல்யுத்தம், குத்துச் சண்டை, கவசமணிந்து சண்டை யிடும் பந்தயம், உடல் வலிவைக் காட்டும் போட்டிகள் ஆகியவை இடம்பெற்றன. இவை ஐந்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இப்போட்டிகளில் வெற்றி பெற்ருேருக்கு, ஒலிவ இலைகளாலான மகுடத்தைப் புனேவர். இலைமுடிக்கு என்ன போட்டி! என்ன சிறப்பு! பேரீச்ச மரத்தின் கிற்ருென்றையும் வெற்றிச்சின்னமாக அணிவிப்பர். வெற்றி பெற்றவர்களே, ஊர்வலமாக மரியா ைதயுடன் அவர்கள் வீட்டிற்கு அழைத்துச்செல்வர். இசை வல்லார் பரணி பாடிப் போற்றுவர். கைதேர்ந்த சிற்பிகள் கல்லில் வெற்றி வீரர்களின் வடிவங்களே வடிப்பதும் உண்டு. புகழ்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டு விழா கி. பி. 893-க்குப் பிறகு நின்றுவிட்டது. இவ்விழாவை, கிரேக்க நாட்டைக் கைப்பற்றிய ரோமானிய அரசர்கள் தடை செய்துவிட்டனர். ஏன் ? இது பாமரர்களின் கூத்தாம். அடக்குபவர்கள், அடக்கப்பட்டவர்களின் வலிவைக் குறைக்க ஒரு சாக்கு.