பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 ஒரு பத்து நூற்ருண்டுகாலம் இவ்விழா நடக்க வில்லே. பின்னர் 1894-இல் கோபர்ட்டின் என்ற பிரஞ்சு நாட்டவர், எர்பர்ட் என்ற ஆங்கிலேயரின் துணேயோடு, இதுபற்றி ஒரு சர்வதேச காங்கிரசைக் கூட்டினர். அதன் விளைவாக சர்வதேச ஒலிம்பிக் குழு ஒன்று அமைக் கப்பட்டது. அக்குழுவினர் ஒலிம்பிக் விளையாட்டுகளே உயிர்ப்பித்தனர். 1896-ஆம் ஆண்டு ஏப்ரல்மாதம் 6-ஆம் நாள் இவ்விளையாட்டுகள் மீண்டும் தொடங்கின. எவ் விடத்தில்? கிரேக்க நாட்டின் முக்கிய நகரமாகிய ஏதென்ஸ் நகரத்தில் தொடங்கின. அன்றுமுதல், இவ் விளையாட்டுகள், நான்காண்டிற்கு ஒருமுறை, தவருது, நடத்தப்படுகின்றன. இரண்டாவது உலகப் பெரும்போர் நடந்த காலத்தில் மட்டும் இவை நடக்கவில்லே. இவ்விளையாட்டு விழாவில் முன்சொன்ன விளையாட்டு களோடு, பல்வேறு புதுப்பந்தயங்களும் இடம் பெற்றன. அவையாவன: நீச்சல், துப்பாக்கியால் சுடுதல், கால் பந்து, கைப்பந்து (Volley ball), ஹாக்கி, கூடைப் பந்து, சைக்கில் விடுதல், எடை தூக்குதல் ஆகியவை. இப்போட்டிகளில் உலகத்தின் பல்வேறு நாடுகளும் பங்கு பெறுகின்றன. இப்போட்டிகளில் குறிப்பிடத்தக்க சிறப்புடையது மாரதான் (Marathon) ஒட்டப் பந்தயம் ஆகும். இருபத்து ஆறுமைல் முன்னுாற்று எண்பத்தாறு (386) கெஜம் ஓடவேண்டிய இப்போட்டி. ஓடுபவரின் தாக்குப்பிடிக்கும் திறனே நன்கு சோதிப்பதாகும். ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் சில சடங்குகளும் சில சம்பிரதாயங்களும் உண்டு. இவ்விழா தொடங்கு முன்னர், ஒலிம்பியா என்ற ஊரிலிருந்து ஒரு தீப்