பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 எதை? மாளிகை மகிழ்ச்சிகளை யா? அல்ல. நினேத்தது, நலிந்தோரை; அடிமைப்பட்டோரை; வாழ வழிவகை யற்ருேரை: குடிசைகளில் முடங்கிக் கிடந்தோரை. சிறந்ததை, நினேப்பவர் பலர்: உழைப்பவரோ சிலர். முடிப்பவரோ அதிலும் சிலர். அச்சிலரில் ஒருவர் மாந்தருள் மாணிக்கம், மனிதகுலக் காவலர், பண்டித நேரு. அவர் சிந்தையெல்லாம், பாரதத்தின் விடுதலேக்கே: மக்களின் நல்வாழ்விற்கே, உழைப்பெல்லாம், நாட்டின் சுதந்திரத்திற்கே: நானிலத்தின் அமைதிக்கே: கோணுமல், அடுத்தடுத்து, சென்றதெல்லாம் சிறைக்கே. தம் தனிவாழ்வும், குடும்ப நலனும், தாய் நாட்டின் திருவடிக்கே காணிக்கையாக்கி வாழ்ந்து, பாரதத்தின் விடுதலையைப் பெற்றுக்காத்த பெருமகனே, நேருவெனும் நன்மகனே, "தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே" என் னும் பேரொளியைக் காணும் தெையல்லாம் வணங்கு வதில் வியப் பேது? சிந்திக்கும் சிந்தையெல்லாம் கண்ணிராக உருகுவது இயல்பேயன்ருே! நாம், இதற்கும் அதற்கும் சித்தியது கண்ணிக், எதெதற்கோ சிந்தியது கண்ணிர்; இவருக்கும் அவருக் கும் சிந்தியது கண்ணிர். சே! இதுதானு நேருவிற்கும் காணிக்கை? நமக்குத் தொழில் நாட்டிற்குழைத்தல்: இமைய பொழுதும் சோரா திருத்தல்’ என்று காலமெல்லாப் உழைத்த உத்தமருக்குக் காணிக்கையாக்க, கண்ணி மட்டுந் தானு உண்டு? வேருென்றும் இல்லேயா?