பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் இந்திய அரசினர் 1961-ஆம் ஆண்டு கல்விக் குழு ஒன்றை சோவியத் ஒன்றியத்திற்கு அனுப்பி வைத்தனர். சோவியத் ஒன்றியம் என்பது எது ? சாதாரண வழக்கில் ரஷ் ஷியா என்கிருர்களே, அதற்குச் சரியான பெயர் சோவியத் ஒன்றியம். இந்தியக் கல்விக்குழுவில் இருந்தவர் மூவர். அம் மூவரில் நானும் ஒருவன். எதற்கு எங்களை சோவியத் ஒன்றியத்திற்கு அனுப்பி வைத்தார்கள் தெரியுமா ? அந்நாட்டின் கல்வி முறை, அமைப்பு, நடைமுறை ஆகியவற்றை நேரில் தெரிந்து கொண்டுவர எங்களே அனுப்பினர்கள். நாங்கள் அவ்வாண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி புதுடெல்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ருேம். அந்நாட்டின் விமான வாயிற்படியாகிய டாஸ்கெண்ட் நகரத்தில் முதல் நான்கு நாட்கள் (5-3-1964-இல் சென்னே வானுெலி கிலேயத்தில் பேசியது)