பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தம் பிரதமர் நேருவிடம் பெருமதிப்பு இருந்ததைக் கண்டோம். சோவியத் நகரங்கள் எப்படியிருக்கின்றன தெரியுமா? அவையெல்லாம் தூய்மையாக உள்ளன. தெருக்களில் எச்சிலும், குப்பையும், கூளமும் காண முடியாது. நடமாடும் மக்கள் எப்படி ? சுறுசுறுப்பா யிருந்தனர். அவரவர் வேலையை அவரவர் பார்ப் பதிலேயே கண்ணுங்கருத்துமாயிருந்தனர். வேலை யில்லாது திரியும் சோம்பேறிகளேக் காணவில்லை. காலிகளே யும் காணமுடியாது. பிச்சைக்காரர்களாவது உண்டா ? அவர்களும் இல்லை. இப்போது கல்வியின் பக்கம் கவனத்தைத் திருப்பு வோம். அந்நாட்டிலுள்ள எல்லாக் குடியரசுகளிலும் கல்வி, கட்டாயமும் இலவசமும். எதுவரை இலவசம்? எல்லா நிலையிலும் கல்வி இலவசமே. தொடக்கக்கல்வி, உயர்நிலைக்கல்வி மட்டுமல்ல; கல்லூரிப் படிப்பும் இலவசமே, கட்டாயக் கல்வி எதுவரை ? நாங்கள் போனதற்கு முந்திய ஆண்டுவரை, எட்டாவது வகுப்பு வரையிலே, கட்டாயக் கல்வி நடைமுறையில் இருந்தது. அக்கட்டாயக் கல்வி முறையை உயர்நிலைப்பள்ளி முடியும் வரை நீட்டுவதென்றும், ஆண்டுக்கு ஆண்டு, ஒரு மேல் வகுப்பிற்கு இது செயல் படுவதென்றும் 1981-இல் முடிவு செய்தனர். பாடஞ்சொல்லிக் கொடுப்பது மட்டுமல்ல இலவசம். மாணவர்களுக்கு வேண்டிய பாடநூல்களே யும் நோட்டுப் புத்தகங்களே யும் இனமாகக் கொடுக்கின்றனர். பள்ளிக் கூடத்திலேயே மதிய உணவு கொடுக்கிருர்கள்.