பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 # ஆகவே, மாணவர்கள் இவற்றைப் பற்றிய கவலே இல்:ை மல் படிக்கிருர்கள்: அக்கறையாகப் படிக்கிருர்கள். LDJT 6.JJT G]] மாணவிகளின் தோற்றம் எப்படி இருக்கிறது ? அவர்கள் எல்லோரும் கொழுகொழு வென்று உடல்நலத்தோடு உள்ளனர். எலும்புந்தோலு மான மாணவனேயோ மாணவியையோ நாங்கள் எங்கும் காணவில்லை. ஆண்களைப்போல பெண்களும் வாட்ட சாட்டமாகவே உள்ளனர். காற்றில் அசைந்தாடும் மலர்க்கொடிகளாக இருக்க சோவியத் பெண்கள் விரும்பவில்லே. ஆண்களோடு சரிநிகர் சமமாக இருந்து எல்லா வேல்ேகளிலும் அலுவல்களிலும் ஈடுபடு கின் ருர்கள். அவர்கள் எத்தகைய கல்வி பெறுகிருர்கள் ? அவர்கள் என்ன என்ன படிக்கிருச்கள் ? அவர்கள் தாய்மொழி, இரஷ் ஷிய மொழி, பிறநாட்டு மொழிகளில் ஒன்று-அதாவது ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்சு ஆகிய வற்றில் ஏதாவது ஒன்று-ஆக மூன்று மொழிகள் படிக் கிருர்கள். டாஸ்கெண்டில் இந்தி கற்கும் மாணவர்களே க் கண்டோம். மேல் வகுப்புகளில் மூன்று மொழிகளும் கட்டாயம். ஆல்ை கல்லூரிச் சேர்க்கைக்கு இருமொழித் தேர்ச்சி போதும். மொழிகள் தவிர, கணக்கு, வரலாறு, பூகோளம், பெளதிகம், இரசாயனம், உயிர் நூல் ஆகிய பாடங்களும் சொல்லித் தரப்படுகின்றன. உடற்பயிற்சி நல்ல கவனம் பெறுகிறது. எல்லாப் பாடங்களையும் தாய்மொழிவாயிலாகவே கற்கின்றனர். ஆனல், சில நகரங்களில் இரண்டொரு பள்ளிகளில் ஆங்கிலத்தின் மூலம் கற்பிக்கும் சோதனே அப்போது நடந்துவந்தது. க. கா.-6