பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 அங்கும் சில பெரியவர்கள் உள்ளனர். மாணவர்களே பல வேலைகளேயும் பார்த்துக்கொள்ளுகின்றனர். நாங் கள் அந்த இரயிலில் ஏறி முழு தூரமும் பயணஞ் செய் தோம். பயணிகள் பெட்டிகள் செளகரியமாகவும் தூய்மையாகவும் இருந்தன. இப்படி நேரிடைத் தொழிற் பயிற்சி பெறுவதால் படித்த வாலிபர்களும் பெண்களும் அலுவலகத்திற்கும் தொழிலுக்கும் தகுதியானவர்களாக உள்ள்னர். 'இது தெரியாது, அது தெரியாது' என்று காலத்தை விணுக் கும் வாலிபர்கள் இல்லை. - 'தரமான தொழிற் பயிற்சி பெறுவதற்கு மூன்றி ைொரு பங்கு நேரத்தை ஒதுக்கி விடுகிருர்களே, அவர்களது படிப்பின் தரம் எப்படி ?' என்று கேட்கத் தோன்றுகிறதா? அக் கேள்விக்கும் பதில் சொல்லு கிறேன். அவர்கள் படிப்பின் தரம் நன்ருக இருக்கிறது. தரமான படிப்பைப்பற்றி எல்லோருக்கும் அக்கறை உண்டு. அது மட்டுமல்ல. மெல்லக்கற்போருக்கு மட்டும் கூடுதல் நேரம் கற்பிக்கும்முறை, அங்கு. கல்வித் திட்டத்திலேயே இணேந்துள்ளது. ஆகவே எல்லோரும் தரமாகப் படித்துவிட முடிகிறது. இவ்வளவு மட்டுமா? மற்ருெரு உபாயத்தையும் கையாளுகிருர்கள். அது என்ன ? சொல்லுகிறேன் கேளுங்கள். கீழ் வகுப்புகளில், மொழிகளுக்கும் வரலாறுபோன்ற மனித இயல் பாடங்களுக்கும் ஒதுக்கும் நேரம் அதிகம். ஆகும் வகுப்பு உயர உயர இதைச் சிறிது சிறிதாகக் குறைக்கிருர்கள். மேல் மூன்று வகுப்புகளில், இவற்றிற்