பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவர்களுக்கு, அந்தந்தப் பாடத்தில் மட்டும் தனி மேற்பார்வையில் கூடுதலாகச் சொல்லிக்கொடுக்க, பள்ளிக்கூடத்திலேயே ஏற்பாடு செய்திருக்கிரு.ர்கள். ஆகவே, மெல்லப் படிப்பவர்கள் கூட, ஆண்டு முடிவதற் குள் முன்னேறி போதிய எண்கள் பெற்று விடுகிருர் கள். அதுமட்டுமா ? பரீட்சை முடிவு, காலாண்டு, அசையாண்டு, ஆண்டுப் பரீட்சைகளே மட்டும் பொறுத்த தல்ல. மாதச் சோதனே மார்க்குகளையும் பருவப் பரீட்சை மார்க்குகளேயும் சேர்த்துக் கவனித்தே தேர்வு' கூறுகிறர்கள். அதனுல், தேக்கம் என்பது அந்நாட்டில் இல்ல்ே. தேக்கத்திகுல் வரும் நீக்கமும் அங்கு இல்லே. இவை இருக்கட்டும்; பள்ளிக்கூடங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டாவா ? பள்ளிக்கூடக் கட்டடங் கள் பல வேறு வேல்ேகளுக்காகக் கட்டப்பட்டவை: பழையவை; ஆனுல் தூய்மையானவை. போதிய வெளிச்சம் உடையவை. பழைய தளவாட சாமான் களும் தம் பள்ளிகளில் இருப்பவை போலவே. ஆணுல் புதிதாகச் செய்யும் சாமான்கள் நவீனமானவை. இப்போதெல்லாம், ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனி நாற்காலி மேசை கொடுக்கும் முறையில் தளவாடங்கள் செய்கிருர்கள். பள்ளிக்கூடங்களில் துனேக் கருவி களும் நிறைய உண்டு. நூல் நிலையங்கள் உண்டா? உண்டு. தொடக்கநிலைப் பள்ளியில்கூட ஆயிரம் இரண்டாயிரம் நூல்கள் கொண்ட நூல் நிலயங்கள் உள்ளன. உயர்நிலைப் பள்ளிகளில் இன்னும் அதிகம். அந் நிலையங்கள் பயன்படுகின்றனவா ? நன்ருகப் பயன்