பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 படுகின்றன. உயர்நிலப்பள்ளி மாணவர்களில் மிகப் பெரும்பாலோர் ஆண்டிற்கு முப்பது நாற்பது நூல்களைப் படித்து முடித்து விடுகிருர்கள். நூல்களைப் படிப்பதிலே, சோவியத் மக்களுக்கு இணே அவர்களே. மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்ல, சாதாரண தொழிலாளிகளெல்லாம் நூல் நிலேயங்களி லிருந்து தாராளமாக நூல்களே எடுத்துப் படிப்பதைப் பார்க்கலாம். என்ன நூல்கள் படிக்கிருர்கள் ? வெறும் கதைகளா ? வெறும் பொழுதுபோக்கு விகடத் துணுக்குகளா? இல்லே. அறிவுப் பெருக்கத்திற்கான நூல்கள். சிந்தனயைத் தூண்டும் நூல்கள். ஐம்பது வயதிற்கு மேற்பட்ட முதியோர் பலர் இரவுப் பள்ளியில் சேர்ந்து அந்த வயதில் பிற நாட்டு மொழியொன்றைப் புதிதாகக் கற்பதைக் கண்ணுரக் கண்டு மகிழ்ந்தோம். மீண்டும் பொதுக் கல்வியைப் பற்றிப் பார்ப்போம். கல்லூரிப் படிப்பும் இலவசம் என்று சொன்னேன் அல்லவா : கல்லூரியில் எளிதாக இடம் கிடைக்கிறதா? இல்ஃப். றத்தாழ மூன்றில் ஒருவருக்கே கிடைக்கும். கல்லூரிக் சேர்க்கை, தகுதி பற்றித்தான் கிடைக்கும். இடம் கிடைக்காத இரண்டு ப்ங்கு பேர்கள் என்ன செய்வது அவர்களுக்கு ஏதாவது ஒரு வேலே கிடைக் கும். வேலேயில் சேர்ந்தபிறகு, மாலேக் கல்லூரிகளில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றுக் கொள்ளலாம். மக் கல்லூரிகளிலும் இலவசப் படிப்பே. ஆகவே, பகல் நேரக் கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள் எதிர் காலம் பாழாவதில்லே.