பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வில்லையா? முடியாதுதான். உண்மையை ஏற்றுக் கொள்வது கடினமே. பாடத் திட்டமே இல்லாத கல்வி முறை உலகில் வேறு எங்கும் கிடையாது. இங்கிலாந்து ஒன்றில் மட்டுமே உண்டு. வாரத்திற்கு வாரம் பாடத் திட்டப்பிரிவு போடுவதிலேயே நேரத்தை விணுக்கிப் பழகிய நமக்கு. இது திடுக்கிடவைக்கும் செய்தியே. அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டம் இல்லாததால், அங்கீகரிக்கப்பட்ட பாடநூல்களும் அங்குக் கிடையா. அப்படியானுல் பள்ளிக்கூட வேலே கள் எப்படி நடக் கின்றன? ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் உள்ள ஆசிரியர்கள் அனேவரும் ஒன்றுகூடி ஒவ்வொரு பாடத்திலும், எவ் வகுப்பில் எவ்வளவு கற்பிப்பது என்று திட்டம் போட்டுக் கொள்கிருர்கள். அதை நடத்திப் பார்க்கிரு.ர்கள். அனு பவத்தையொட்டிக் கூட்டிக்கொள்வார்கள், அல்லது குறைத்துக்கொள்வார்கள். நீக்குப்போக்கு உரிமை யும் பள்ளிக்கூடங்களுக்கே. போட்டுக்கொண்ட திட்டத்திற்கேற்பப் பாடநூல்களைப் பொறுக்கி யெடுத்துக் கொள்ளுவது வழக்கம். இப்படித் தனித்தனிப் பாடத்திட்டம் போட்டுக் கொண்டால், பள்ளியிறுதியில் எந் நிலையை அடைவது ? பள்ளிப்படிப்பை முடித்ததும், பொதுக்கல்விச் சான்றுப் பரீட்சை எழுதலாம். இப்பரீட்சையை அரசினர் நடத்துகின்றனர். எல்லோரும் எழுத வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. சர்க்கார் வேலைக்கு ஆசைப்படுகிற வர்கள் எழுதித் தேறவேண்டும்; மேல் படிப்பிற்குப் போக விரும்புவோர் எழுதித் தேறவேண்டும். அதில்