பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 இந்த ஒளிக்கு அருளொளி என்றும், அருட் ஜோதி என்றும், அருளாம் பெருஞ்ஜோதி என்றும், திருவருள் என்றும், திருவடி என்றும், திருநடம் என்றும் பெயர். அ டி க ள் ஆண்டவனிடம் திருவருள் தரவேண்டிக் குறையிரக்கும்போது * அருட்ஜோதி அளித்தனையேல் நின் இனக் கண்டு கொள்வேன் ’’ என் பார். அருட்ஜோதியாகிய திருவருள், உள்ளுருகுந் தருணத்தே ஒளிகாட்டி விளங்கும் உயர்மலர்ச்சே வடிவருந்த உவந்து நடந் தருளி -திரு. 4: 2:50 என்றபடி அடிகளின் கண் ணினுங் கருத்தினுங் கலந்தது (திரு. 6: 161:10). இந்நிலையில் மாமாயை நீங்கும் என்றும், அப்போதுதான் பொன் வடிவங் கிட்டுமென்றும், மரணமென்பது இல்லை என்றும் கூறுவர். மாமாயை நீங்கினள்பொன் வண்ணவடி வுற்றதென்றும் சாமா றிலைஎனக்குத் தான் -திரு. 6: 109:11 பெருமாயை யென்னுமொரு பெண்பிள்ளை நீதான் பெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றே னினிநின் உபகரிப்போ ரனுத்துணையு முளத்திடைநான் விரும்பேன் அருளாய ஜோதியெனக் குபகரிக்கின் றது.நீ அறியாயோ வென்னளவி லமைகஅய லமர்க -திரு. 6: 102:14 என்பன காண்க.