பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திடத் தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக் கண்ணினிர் பெருகிக் கால்வழிந் தோடிட வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற் கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக் கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட இனம்பெறு சித்த மியைந்து களித்திட அகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச் சகங்கான வுள்ள ந் தழைத்து மலர்ந்திட அறிவுரு வனைத்து மானந்த மாயிடப் பொறியுறு மான்மதற் போதமும் போயிடத் தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச் சத்துவ மொன்றே தனித்துநின் ருேங்கிட உலகெலாம் விடய முளவெலா மறைந்திட அலகிலா வருளி ைைசமேற் பொங்கிட என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட என்னுளத் தோங்கிய என்றணி அன்பே -திரு. 6: 1: 1449-1476 இவ்வாறு அ ன் பு ரு வ ம் பெற்ற அடிகள் * மரண ந் தவிர்ந்தேன் ; எனக்கு என்றுஞ் சாமா றில்லை ; பொன் வடிவுற்றது ”” என்று பற்பல பாடல் களில் அறிவிக்கின் ருர்கள். எமன் எனும் அவன் இனி இலையிலை மகனே எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே -திரு. 6: 101: 18