105 ஏர்பூத்த மணிமன்றி லின் பநடம் புரியும் i என்னருமைத் துரையேநின் னின்னருளை நினைந்து கார்பூத்த கனமழைபோற் கண்களினிர் சொரிந்து கனிந்து மிகப் பாடுகின்ற களிப்பையடைந் தனனே -திரு. 4; 4; 8 என்றும் கூறுவன காண்க. இனி, மணிவாசகப் பெருமான் அன்புருவான அனுபவங்களே யுஞ் சிறிது காண்பா ம், பால் நினைந்து ஊட்டும் தாயினுஞ் சிறந்த ஆண்டவன், அன்பர்க்கே அருளுவான் என்றும் அவன் பால் ஆராத காதல்கொண்டு ஒழுக அவனிடமிருந்தே அன்பைப் பெறவேண்டுமென்றும் மணிவாசகப் பெருமான் கூறுகின் ருர். யாவராயினும் அன்பரன்றி அறியொணு மலர்ச்சோதியான் என்றும், ஆடகச்சீர் மணிக்குன்றே இடையரு அன்புணக்கென் ஊடகத்தே நின்று உருகத் தந்தருள்எம் உடையானே என்றும் கூறுவன காண் க. மேலும், அந்த இடையரு அன்பினுல்தான் ஆவியும் ஆக்கையும் ஆனந்தமாய்க் கசிந்து உருகுமென்றும், அங்ங்னம் இரந்து இரந்து உருகி நின் ருல் ஆண்டவன் சோதியாய் மனத்துள்ளே எழுவான் என்றும், சாயா அன்புகொண்டு நாள் தோறும் தழைப்பவரைத் தாயே ஆகி வளர்ப்பான் என்றும் அப்போது அவர்தம் என்பு நைந்து
பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/116
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
