பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 உருகுமென்றும், புலன்கள் ஒன்றுமென்றும், வாய் நாதா என்று அரற்றி உரைதடுமாறுமென்றும், உரோமம் சிலிர்க்குமென்றும், கரங்குவியுமென்றும் இதயம் மலருமென்றும், கண் களிகூரக் கண்ணிர்த் துளி அரும்புமென்றும், அந்நிலையில் அவர்க்கு சுவைதரு கோல்தேன் கொண்டு அவயவமும் அளிதரு அள்ளுராக்கையும் அமைப்பானென்றும், அதில் அற்புதமான அமுத தாரைகள் ஊற்றெடுத் தோடி எற்புத் துளை தொறும் தேங்குமென்றும் கூறியருளுகின் ருர். இரந்திரந்துருக என்மனத்துள்ளே எழுகின்ற சோதியே என்றும், அரைசனே அன்பர்க் கடியனே னுடைய அப்பனே ஆவியோ டாக்கை. புரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கி என்றும், நினைத்தொறுங் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியும் குனிப்புடை யானுக்கே சென்று தாய் கோத்தும்பி என்றும், இன்றெனக் கெளிவந் தருளி அழிதரு மாக்கை ஒழியச்செய்த ஒண்பொருள் அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி என்றும்,