பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 கருவிற் கலந்த துணையேயென் கனிவிற் கலந்த வமுதேயென் கண்ணிற் கலந்த வொளியேயென் கருத்திற் கலந்த களிப்பேயென் உருவிற் கலந்த வழகேயென் உயிரிற் கலந்த உறவேயென் உணர்விற் கலந்த சுகமேயென் னுடைய வொருமைப் பெருமானே -திரு. 6 : 58 : 2 சித்தே வயங்க வுன யுட் கலந்து கொண்டேன் -திரு. 6 : 58 : 3 நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் ஜோதி நாதனை என்னுளே கண்டு கூடல்செய் கின்றேன் எண்ணிய வெல்லாங் கூடியே குலவியின் புருவாய் ஆடல்செய் கின்றேன் சித்தெலாம் வல்லா னம்பலந் தன்னையே குறித்துப் பாடல்செய் கின்றேன் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே -திரு. 6 : 72 : 6 சும்மா விருப்பதுவே துணிவெனக்கொண் டிருக்கின்ருேரை விதுவென்ற தண்ணளியாற் கலந்து கொண்டு விளங்குகின்ற பெருவெளியே விமல்த் தேவே -திரு 1: 5: 66 தேவியுற் ருெளிர்தரு திருவுரு வுடன் என தாவியிற் கலந்தொளிர் அருட்பெருஞ் ஜோதி -திரு. 6 : 1 : 199