பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அனுபவ நிலைகள் உயிரனுபவம், அருள னுபவம், சிவானுபவம் எனப்படும் பெரும் பேரனுபவங்கள் பெறுதற்கு அருமையான வை. இவற்றை அனுபவித்தவர்கள் சுத்தஞானிகளாவர். உயிரனுபவம் பெற்றவர்கள் சுத்த சன் மார்க்கத்திற்கு உரியவர் என் ருல் சுத்த சன் மார்க்கத்தின் பெற்றியை எ ன் ென ன் று கூறுவது! இவ்வனுபவங்கள் ஒருசில பெரியோர் களுக்குமட்டும் கைகூடுகின்றன. அ. த நிற் கு க் காரணம் எல்லோரும் இதனை விரும்புவதில்லை. * ஆசையுண்டேல் வம்மின் ” என்றும், " சன் மார்க்க ந ன் னி லே மேவுருர் தங்களை விடுக நெஞ்சமே ' என்றும் அடிகள் வருந்தியழைத்து விட்டுவிடுகின் ருர். இவ்வருமையான அனுபவங் களைத் தாம் நுகர்ந்தவண்ணம் அடிகள் அன்புடன் உரைத்துள்ளார்கள். இ வ. ற் ைற உண்மையாக அறிந்துகொள்வதற்கு இதில் படிப்படியாக உள்ள அனுபவநிலைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும். இதனை வள்ளற்பெருமான் கருணையால் இயன்ற மட்டில் தொகுத்துவிளக்கத் தொடங்குவோம். இவ்வுலக வாழ்வில் உள்ள மக்கள் இம்மை இன் பங்குறித்தே வாழ்கின்றனர். வாழ்க்கை நிலே யற்றது என்றும், அல்லல்கள் நிரம்பியதென்றும் அதில் சுகத்தைக் காணுவது அரிது என்றும், சில சமயங்களில் கிடைக்கும் சிறிய இன்பமும் நிலைத்து நிற்பதில்லை என்றும் எண்ணுவது என்றைக்கும்