119 படுத்தமாட்டான். நித்தியமாக உள்ள இறைவனே யும், உயிரையும்பற்றி எண்ணுவான். உயிரைத் தொடர்ந்துநின்று இறைவனே அறியவொட்டாது மறைக்கும் பாசங்களைத் தவிர்க்கும் வழி என்ன என்று சிந்திப்பான். எந்த நேரமும் அவனுக்கு உலகியலில் மனம் பற்ருது. அநித்திய விவேகமும், எல்லாம் சிவன்செயல் என்ற நினைவும் முதிரும். மனம் புருவமத்தியில் சஞ்சரிக்கும். இவனுடைய கனவுநிலைக்குச் சீவசொர்ப்பனம் என்று பெயர். அப்போது அ வ ன் மனம் கண்டத்திற்கு வரும். தன்னைப் பிரித்து அறிதலும், இறைவனது தயவில்ை தான் வாழ்வதாக நினைப்பதும் மாருமல் கனவு காண் பான். கனவில் தன் மேல் புலிபாய்வதாயினும் அஞ்சாது கன வு காண்கின்ருேம் என்ற நினைப் பிற்கு வந்து இறைவன் நினைவுடன் திரும்பிப் படுப் பான். இவனுக்குக் கனவிலும் பெண்ணுசையிராது. துயிலும்போது அறிவொடு துயில்வான். துரங்கி எழும்போது மறதியின்றி எழுவான். இந்நிலைக்குச் சீவசுழுத்தி என்றுபெயர். இந்நிலையில் அவனுக்கு சிறிதும் பொன் ைைசயிருக்காது. சு. வ மி க ள் சுழுத்தியிலும் பொன் னுசை கூடாதென்றனர். சுழுத்தியில் அவன் மனம் இதயத்தில் இருக்கும். இதற்கு அடுத்த மேல்நிலை சீவதுரியம் எனப்படும். இந்நிலையில் தனது சி று ைம யு ம் இறைவனது பெருமையும் விளங்கும். மனம் பு த் தி சித்தம் அகங்காரம் என்கின்ற நான்கு கரணங்களும் பொறி, புலன்களின் வழி ஓடாமல் அவற்றையெல் லாம் தம்முள் அடக்கி நிறுத்தும் ஆற்றலைப் பெறும். உள் ளம் இறையருளில் ஒடுங்கிநிற்கும். அதனல்
பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/132
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
