121 முன்னரே ஆணவ மலத்தின் அதிகரிப்பு அடங்கு மென்றும் கன்ம மலத்தில் ஒரு கூருகிய ஆகாமியம் துளிர்விடாது என்றும் கண்டோம். ஆதலால் சாதகனுக்கு மலங்கள் ஒருவாறு நீங்கிய அனுபவம் கைகூடும். யான் எனது என்னும் செறுக்கற்று எல்லாம் சிவன் செயல் என்ற எண்ணம் இடை யருது நிலைக்கும். என் செயலால் ஆவதொன்று மில்லை என்றபோது கன்மம் வேலை செய்யாது. ஒருகால் நேர்ந்தபோது அருட்டுணேயால் நீக்கிக் கொள்ளுவான். இம்மையுலகத்தியலில் நாட்ட மில்லாதொழியும். ஆகவே, அசுத்தமாயா மலத்திரைகள் படலம் படலமாகக் கழலும். ஞான சபையில் காட்டி யருளியபடி இகலோக லட்சிய முள்ள முதல் மூன்று திரைகள் நீங்கும். இவற்றை நாம் நன் முற்சியால் நீக்கிக்கொள்ளவேண்டும் என்று அடிகள் விளக்குகின்றனர். இந்த நிலை யைச் சுத்தசாக்கிரம் என்று கூறுப. சாதகன் மனத்தைப் புருவமத்தியில் நிறுத்தி அருள் ஒளியை நாடி நிற்பான். அவனுக்குப் பித்த நாடி துடித்துப்பேசும். முன்னர்க் கூறிய இந்திரிய ஒழுக்கமும், கரண ஒழுக்கமும், சீவ ஒழுக்கமும் கைகூடிய இவனுக்குக் கனவும் தெய்வம் பற்றிய தாக இருக்கும். பற்றற்ற நிலையில் உயிர்களுக்கு உண்மையான தொண்டு செய் யு ம் கனவு காண்பான், வாதநாடி அடிக்கும் இந்நிலை சுத்த சொர்ப்பனம் ஆகும். உயிர்களிடத்து இரக்கமும் ஆண்டவன்பால் அயரா அன்பும் கொண்ட இவனுக்குத் தூக்கம் வராது; சற்றுத் துங்கில்ை
பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/134
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
