125 இனி, வேதாந்தம் அவத்தைகளைப் பற்றிக் கூறுவதையும் பார்ப்போம். அதனுள் அவத்தை கள் ஐந்தும் தத்துவங்களில் அடங்கும். தத்து வங்கள் முதல் தத்துவம், இரண்டாந் தத்துவம், மூன் ருந் தத்துவம் எனப்படும். முதல் தத்துவம் 30. அவையாவன : பூதம் 5, பொறி 5, புலன் 5, கன்மேந்திரியம் 5, கன்ம விஷயம் 5, கரணம் 4, அறிவு 1. இரண்டாந்தத்துவம் 30. அவையாவன: நாடி 10, வாயு 10, ஆசயம் 5, கோசம் 5. முன்ருந்தத்துவம் 36. அவையாவன: ஆதாரம் 6, மண்டலம் 3, மலம் 3, தோஷம் 3, ஏட8ண 3, கு ைம் 3, இராகம் 8. வினை 2. அவத்தை 5. அவையாவன : சா க் கி ர ம், சொர்ப்பனம், சு ழு த் தி, துரியம், துரியா தீதம். ஆகவே, வேதாந்தம் கூறும் துரியம், துரியா தீத நிலைகளைத் தான் சுவாமிகள் பரதுரியம், பரதுரியாதீதமாகக் கொண்டனர். சுத்ததுரியம், சுத்ததுரியாதீதமென இவற்றைக் கூறுவாருமுளர். இனி, தி ரு ம ந் தி ர ம் அவத்தைகளை விரித் துரைக்குமாறும் காண் பாம். திருமூலர் திருமந்திரத் திருமுறையால் மெய்ம்மொழிப் பொருளை உணர்த்தி யருளியதாகச் சுவாமிகள் கூறுகின் ருர். அவத்தை கள் ஐந்தும் அனுபவமாகுமிடங்களையும் ஆங் காங்கு ஆன்மாவுடன் கூடிக் காரியப்படும் கருவி
பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/138
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
