பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 ஆன மனமு மறிகின்ற புத்தியு மூனை யிழந்துநின் றுள்ளே யுயிர்ப்பெய்தித் தான மிழந்து தங்கிய வாறுபோல் ஞான மிழந்து சுழுத்திய தாமே -திருமந்திரம் 2155 துரியம், து ரி யா தீ த த் ைத விளக்குவனவாகக் காணப்படும் மந்திரங்கள் முறையே: கானத் தெழுந்து திரியுந் துரியந்தான் வானத் தெழுந்துபோய் வையம் பிறகிட்டுக் கானத் தெழுந்த கருத்தின் தலையிலே ஊனைத் தவிர்ந்துமங் கோங்கிநின் ருனே -திருமந்திரம் 2157 துரிய மிருப்பதுஞ் சாக்கிரத் துள்ளே நரிகள் பதினுலு நஞ்சுண்டு செத்தன பரிய புரவியும் பாறிப் பறந்தது துரிய மிறந்திடஞ் சொல்லவொண் ணுதே -திருமந்திரம் 2159 இத் திருமந்திரப் பாடல்களில் பாடபேதம் மிகுந் துள்ளது. எனினும், அவத்தைகள் நன்கு விளக்கப் பட்டுள்ளன. இவை சீவசாக்கிரம் முதலான ஐந்தவத்தைகளேயாகும் என்பர். இவையன்றி பரசாக்கிரம் முதலான ஐந்தவத்தைகளும், சிவ சாக்கிரம் முதலான ஐந்தவத்தைகளும் பேசப்படு கின்றன. மேலும் மூலர் சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் என்ற மூன்று துரியங்களைக் கூறித் தத்துவமசி மகாவாக்கியத்தின் உ ண் ைம ைய விளக்குகின் ருர். சீவதுரியத்தில் ஆன்மா தொம்பத