பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 இவற்றுள் நின் மல துரியாதீதத்தே ஆன்மா பணியற நின்று சிவத்தைத் தரிசித்து ஆனந்தத் தில் அழுந்திநிற்குமென் பர். நி ன் ம ல துரியா தீதந்தான் சுவாமிகள் கூறும் சிவதுரியாதீதமாக இருத்தல் கூடும். இவையன்றி வீரசைவசாத்திரமாகிய சுத்த சாதகத்துள் குமாரதேவர் தொம்பத நிலையில் ஆகாமிய கன்மமும் ஆணவமும் நீங்குமென்று கூறுகின் ருர் (இது சீவதுரியநிலை). தற்பத நிலையில் /சஞ்சிதமும் மாயையும் அகலுமென்பர் (இது பரதுரிய நிலை). அசிபத நி லே யி ல் பிராரத்தங் கழலுமென்பர் (இது சிவதுரிய நிலை). இவரது அனுபவ நிலைகள் திருமந்திரத்தை ஒத்துள்ளன. கும்ாரதேவர் அனுபவங்கள் சுவாமிகள் கூறும் அனுபவ நிலைகளில் சிவதுரியம் வரை ஒத்துள்ளன. ஆகவே, சீவதுரியம் முதலான மூன்று துரியங்கள் வரை மலங்கள் தொடர்ந்துவந்து சிவதுரியத்தில் முற்றிலுமகலுமென்பதாயிற்று. மேற்குறிப்பிட்ட நின்மலாவத்தைகள் அடிகள் கூறும் சிவசாக்கிரம் முதலான அவத்தைகளே ஒக்கும்போலும் என எண்ணவேண்டியிருக்கிறது. இஃதிங்ங்னமாக, சுவாமிகள் கூறும் பரசாக் கிரம் முதலான நிலையனுபவங்களே நோக்குவாம். பரசாக்கிரம் புகுந்த சாதகனுக்குச் சுத்தமாயா திரைகள் நீங்கத்தொடங்கும். சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை அத்தகை காட்டும் அருட்பெருஞ் ஜோதி -திரு. 6:1:835