பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 அதல்ை சாதகன் தத்துவாதீத மேல்நிலையை அடைவான். இவனுக்குச் சித்திகள் எல்லாம் கைகூடும். சித்திகளையெல்லாந் தெரிந்துகொண்டு மேல்நிலைக்கேறுதல் சன்மார்க்கநெறி. இவ்விடத் தில் கைவரப்பெறுஞ் சித்திகளைக் கண்டு இதனைச் சிவநிலையாகக் கருதி ஏமாந்த சாதுக்கள் பலர் என் ப. சுத்த சன்மார்க்க சாதகன் ஜீவகாருண்ய ஒழுக்கம் கைவரப்பெற்று ஆன்மானுபவம் விளங்கி சத்விசாரத்தில் அழுந்தி நிற்பான். புருவமத்தியில் நிலைத்து வரும் அருள் ஒளியின் துணைகொண்டு மிகச்சிறந்த மேற்படிக்கு ஏறுவான். இந்த அனுபவ நிலைக்குச் சிவசாக்கிரம் என்று பெயர். ஆண்டவனைக் காண ஆசைபொங்கித் துடிப்பான். அ ன் ேப உருவாய், இரக்கமே நினைவாய், அருளே அறிவாய், அருட்பெருஞ் ஜோதியே நாட்டமாக உயிர்கள் உவப்ப உதவி மகிழ்வான். இறைவனது தனிப்பெருங் கருணையை உள்ளவாறு அறிந்து அழுவான். பல பெரியோர்கள் பரதுரியத்திலும், பலர் பரதுரியாதீதத்திலும், மேலும் பலர் சிவசாக்கிரத்திலும் ஆன்ம ஒளியைக் கண்டு இன் புற்று அருள் ஒளி கண்டு ஆற்ருது அதையே முடிந்த நிலையாகக் கருதி அவ்வளவில் நின்றனர் என்ப. இவர் இந்நிலையனுபவங்களைப் பெறுதற் குரிய திருவருள் வல்லபந்தான் பெற்றனர்போலும். சிவசாக்கிர நன்னிலைக்கேறிய சாதகன் தானும் தன்னுணர்வும் ஒருங்குறக் கரைந்து அருளம்மைபால் தவழ்ந்து நிற்பான். அவளரு ளாலே அருட்பெருஞ்ஜோதி அப்பனேக் கானும்