137 உருவம் வேண்டி அருள் நினைவாய் அருள் ஒளியில் அழுந்திய சாதகன் அருள் நிறையும் உபசாந்த மெய்துவான். உபசாந்தப்பதம் (1 : 1 : 20) என்றும் உபசாந்த வெளியிலுறும் அனுபவம் ஒருங்கநிறை உண்மைவெளியே (6 100 : 21) என்றும் சிவ சுழுத்தியனுபவம் கூ ற ப் ப டு ம். இதன் மேல் , உள்ளது சிவதுரியம். இது மவுன நிலையென்றும், மெளனவெளியில் நிகழ்வதென்றும், மெளன அணை மேற்கொண்டு இருப்பதெனவும் கூறப்படும். சிவ துரிய நன்னிலே மனங்கடந்தது, மதிகடந்தது ; தவப்பேரனுபவமாகிய இந்நிலையிலிருந்து சன் மார்க்க நிலை அனுபவங்கள் தொடங்குதலின் திரு வருட் டுணேகொண்டு மேலுள்ள சிவநிலைகளைத் தனித் தலைப்பில் சிந்திப்பாம். அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத் தருட்பெருந் தலத்துமே னிலையில் அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில் அருட்பெருந் திருவிலே அமர்ந்த அருட்பெரும் பதியே யருட்பெரு நிதியே அருட்பெருஞ் சித்தியென் னமுதே அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே அருட்பெருஞ் ஜோதியென் னரசே -திரு. 6 : 4 : 1.
பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/150
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
