பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 வேதாந்தம் முதலான அந்தங்களெல்லாம் தனித் துரைக்கும் பொருளைச் சுத்தசிவ சன்மார்க்க நிலை யில் இருந்து அருளாம் பெருஞ்ஜோதி கொண்டு அறிதல் கூடும்” என்பர். ஆகவே, சிவானுபவத் தால் சமரச சன்மார்க்கம் பெறு த லும் சுத்த சன்மார்க்க நிலைநின்று சிவத்தை அறிந்து அனுப வித்தலும் ஒன்றையொன்று பிணைத்துள்ளது. முதற்கண் சிவதுரிய அனுபவம் சன்மார்க்கத் தொடக்கத்தில் நுகரப்படும். இவ்வுண்மையை ' குருதுரியங் காண்கின்றேன் சமரசசன் மார்க்கம் கூடினேன்..................... -திரு. 6 82; 95 என்பதாலும், சிவதுரிய அனுபவமான மெய்ம் மையே சன்மார்க்கமாம்” என்பதாலும் அறியலாம். சிவதுரியத்தில் நுகரப்படும் மெய்யான அனுபவம் சன்மார்க்கம் எனப்படும். வாய்மை, உண்மை என்ற சொற்கள் இருக்கவும் மெய்ம்மை என்றது ஏன் ? சன்மார்க்க நெறியில் சிவமாதற்கு முனைந்து நிற்கும் ஆன்மா மலமெலாம் நீங்கிய பூதவுடலில் நின்றுதான் சிவதுரியம் அனுபவிக்கும் என்பதை உணர்த்தும். சன்மார்க்கத்தைச் சுவாமிகள் என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந்தானே என்றும், மலங்களுக்கும், பிணிகளுக்கும், புழுக்களுக்கும் இருப்பிடமாகிய நம்முடல் சுத்தசன்மார்க்கத்தைச் சேர்ந்தால் நித்தியமான சுத்த தேகமாகுமென்றும் கூறுவர். இது சிவதுரிய அனுபவம். இந்நிலையில் ஆன்மா சிற்சத்தி நிலையிலிருந்து அருட்சத்தி யாகும். அருட் கூத்தாடும் ஆண்டவன் மருவிடப்