பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 வான்பதிக்குங் கிடைப்பரியார் சிற்சபையில் நடிக்கும் மணவாளர் எனப்புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம்’ தான்பதித்த பொன்வடிவந் தனையடைந்து களித்தேன் E -திரு. 6: 82 : 94 புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான் புத்தமுத நானுண்டு பூரித்த தருணம்

  • -திரு. 6 : 82 : 98

ஆகவே, சிவதுரிய அனுபவமான மெய்ம் மையே சன்மார்க்கத் தொடக்கமென்றும், என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் என்றும், பெரிய சிவவனுபவத்தால் சன்மார்க்கம் பெற்றே னென்றும், சன்மார்க்கஞ் சார்ந்த பரிசதனுல் சிவதுரியங் கூடினேன் என்றும், சிவதுரியத்தில் ஆண்டவனைப் புறத்தில் கூடுதல் நிகழுமென்றும், அதனுல் சுத்ததேகம் பெற்று இறவாமை உற்றே னென்றும், புறப்புணர்ச்சித் தருணம்தான் புத்த முதம் தாம் உண்டு பூரித்த த ரு ண மென் று ம், அந்நிலையில் எங்கணும் பேரொளிமயமாய் இருந்த தென்றும், அப்போது சிவானந்தமயமாகி நிறை வுற்றேனென்றும் சிவதுரியப் பெற்றியினை உரைத் தருளுகின்றர். அடுத்தது சிவதுரியாதீதம். இந்தச் சிவானுபவ நிலையில் திருவருள் பூரணமாகக் கிடைக்கும்; அருள் ஒளி நிறையும். சாதகன் அருள் வடிவம் பெறுவான் ; ஆனந்த அனுபவமுறுவான். சுத்த சன்மார்க்கநிலையனுபவங் கைகூடும். ஆண்ட