பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 வனை மீண்டும் புறத்திற் கலந்து களிப்பான். திருக் கணவருடன் சன்மார்க்க சபைக்கேகவுஞ்செய் வான். திருவருட் சுதந்தரம் கிடைக்கும். எல்லாம் அருட்செயல் என்று செம்மாப்பான். ஆண்டவனே க் கலந்து கலந்து இன்புறுவான். புணருந்தொறும் பெறும் போகம் பின்னும் புதிதாய் இருப்பதுகண்டு இறும்பூதெய்துவான். அகப்புணர்ச்சியின் ஏற்றம் எத்தகைத்தோ என ஏங்குவான். இந்த நல்ல சுகநிலையில் ஆண்டவனே இன் புற்ற பரம்பொருள் திருமால். இதனை அடிகள் அகத்துறையில் கூறுகின் ருர்கள். ஆண்டவன் தலைவனுகவும், அடிகள் தலைவியாகவும், மனம் உயிர்த்தோழியாகவும் கொண்டு எ ழு ந் த து அனுபவமாலை. அதில் தன்னை இடித்துரைத்த தோழிக்குத் தலைவி உரிமை கிளத்தல் என்னும் துறையில் அமைந்துள்ளது இத்திருப்பாட்டு. தலைவியை நோக்கித் தோழி கேட்கின்ருள், தாழ் குழலி! நீ ஆண்மகன் போல் நாணமச்சம் விடுத்துச் சபைக்கேறுகின்றேன் எ ன் ற னே ! ஈதென்ன ?” என்று. அதற்குத் தலைவி கூறுகின்ருள், “ என் வாழ்விற்கமைந்த கணவரைப் புறத்தனேந்தாள் ஒருத்தி , அவளுக்கு மால் என்று பெயர்; ஓர் வ8ள யாழிப் படையாள் ; ஆ ழ் க ட லி ல் துயில் கின்ருள் ; மாமணி மண்டபத்தே ஆனந்த வல்லி யாக ஆள்கின் ருள் : அ வ ளே ஆண்மகனய் அறிந்திலையோ ? நான் ஆ ண் ம க ைகி ன் ற து அதிசயமோ ?’ என்று.