பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தாழ்குழல்நீ ஆண்மகன்போல் நாணமச்சம் விடுத்தே சபைக்கேறு கின்ருய்என் றுரைக்கின்ருய் தோழி வாழ்வகையென் கணவர்தமைப் புறத்தணைந்தா ளொருத்தி மாலெனும்பே ருடையாளோர் வளையாழிப் படையாள் ஆழ்கடலிற் றுயில்கின்ருள் மாமணிமண் டபத்தே ஆள்கின் ருள் ஆண்மகய்ை அறிந்திலேயோ அவரைக் கேழ்வகையில் அகம்புணர்ந்தேன் அவர்கருணை அமுதம் கிடைத்தது.நா னுண்மகன கின்றததி சயமோ -திரு. 6 : 82 : 52 இவ்வாறு சிவதுரியாதீதத்தே அருள்நிலை பெற்ற சாதகன் இப்பெற்றியை நினைந்து, மருள்வடிவே யெஞ்ஞான்று மெவ்விடத்தும் எதலுை மாய் வி லாத t அருள் வடிவா யிம்மையிலே யடைந்திடப்பெற் i. ருடுகின்றேன் அந்தோ அந்தோ -திரு. 6: 73 : 10 என்று கூறி அதிசயிக்கின் ருன், மேலும், இந்நிலை யில்தான் அருளனுபவங் கிடைக்கும். இப்பெரும் பேரனுபவம் பரநாதத்தின் மேல் நிகழ்வது.பரநாதம் என்பது சிவந்திகழும் நவநிலைகளுள் முடிவானது. பரநாதநிலையதன் மேலிருப்பது தி ரு வ டி நி லே. சுயஞ் சுடரிற்றுலங்குகின்ற திருவடிகள் பற்பூத நிலைகடந்து நாதநிலைக்கப்பால், பரநாதநிலையதன் மேல் விளங்கு ' மென்றும், இவை நான்முகனும் திருமாலும் அறிதற்கரிதாயின என்றும் கூறுவர். திருச்சிற்றம்பலத்தே இன்பத் திருவுருக்கொண்டு அருளாம் திருநடஞ்செய்யும் திருவடிகள் தம்மை