பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 விவகாரங்களும் சேர்ந்து திருவருட்பாவாக வெளிப் பட்டன என்று சுவாமிகளே கூறுகின் ருர். எனினும் ஏறக் குறைய ஆருயிரம் பாடல்களில் சன்மார்க்கப் பெருநெறி ஓரிடத்தில் ஒன்றன் பின் ஒன் ருக விளக் கப்படவில்லை. ஆனல், ஆங்காங்கு கூறப்பெற் றுள்ள இச்சன் மார்க்கப் பெருநெறியை இனத்துப் பார்க்கும்போது அணுத்துணையும் முரணுமல் அழ கொழுகப் பிணைத்து நிற்கும் அமைப்பு நெஞ்சை அள்ளுகிறது. 1. சுத்தசன்மார்க்கம் இராமலிங்க சுவாமிகளின் தலைமாணுக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார் ஆவார். இவர் திருவருட்பா வரலாறு பாடியுள்ளார். இதில் காப் புச் செய்யுளுடன் அறுபத்துநான்கு செய்யுள்கள் உள்ளன. இவர் திருவருட்பா என்பதற்குத் தான் கொண்ட உரையை ஒரு செய்யுளில் தெரிவிக்கின் றர். திருவருட்பாவைத் தொட்டவனை அது சிவமாக்கும் உளவு கொண்டது என்பதே அவர் கொண்ட பொருள். இது நிற்க, மணிவாசகப் பெருமான் சிவப் பேறு பெற்ற செய்தியைத் திருவாசகத்துள் காண லாம். சிவமாக்கி எனையாண்ட அத்தன் எனக் கருளியவாறு யார் பெறுவார் அச்சோவே' என்று திருவாசகம் செய்தருளுகின் ருர். ஆகவே, சிவமாகு தல்தான் பிறவிப்பயன் என்பதாயிற்று. இராமலிங்க சுவாமிகள் இதனைக் கடவுள் நிலையறிந்து அம்மய மாதல் என்றும், ஆன்மலாபம் என்றும் கூறி, அதனேத் தாம் பெறுதற்கு மேற்கொண்ட சுத்த