பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 53 உணவெனப் பலகால் உரைக்கினும் நிகரா வண முறு மின்ப மயமே யதுவாய்க் கலந்தறி வுருவாய்க் கருதுதற் கரிதாய் நலந்தரு விளக்கமு நவிலருந் தண்மையும் உள்ளதா யென்று முள்ளதா யென்னுள் உள்ளதா யென்றன் உயிருள முடம்புடன் எல்லா மினிப்ப இயலுறு சுவையளித் தெல்லாம் வல்லசித் தியற்கைய தாகிச் சாகா வரமுந் தனித்தபே ரறிவும் மாகா தலிற்சிவ வல்லப சத்தியும் செயற்கரு மனந்த சித்தியு மின்பமும் மயக்கறத் தருந்திறல் வண்மைய தாகிப் பூரண வடிவாய்ப் பொங்கிமேற் றதும்பி ஆரண முடியுட னுகம முடியுங் கடந்தென தறிவாங் கனன்மேற் சபைநடு நடந்திகழ் கின்றமெய்ஞ் ஞானவா ரமுதே -திரு. 6: 1: 1256-1274 இந்த அருளமுதம் சிற்சபை எனப்படும் புருவ மத்தியில் உண்டாகும். இதனைச் சா த க ன் உண்டு, தேக்கி இன்புறுவான். இந்த அமுதங் களே மனித தேகம் பெற்ற எல்லா ஆன்மாக்களும் பெற்று அனுபவிக்கலாம். புருவமத்தியில் புண்ணி யன் நடமாட வேண்டிநின் ருல் அருளமுதஞ் சுரக்கும். இதனை அடிகள், தம்மைமறந்து அருளமுதம் உண்டு தேக்கும் தகையுடையார் திருக்கூட்டம் சார்ந்து நாயேன் வெம்மையெலாந் தவிர்ந்துமணங் குளிரக் கேள்வி விருந்தருந்தி மெய்யறிவாம் வீட்டில் என்றும்