பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 56 ஐந்தொழில் முதலியவைகளைப் பெறமாட்டாது' என்றனர். சீவன் முத்தி, பதமுத்தி, பரமுத்தி, அருவச் சித்தி, அருவுருவச் சித்தி முதலான சித்தி யனுபவங்களிலும் ஆன்மா சிவத்துடன் அநந்திய மாய், அத்துவிதமாய்க் கலந்தின்புறும் என்றும் கூறுவர். சுத்த சன்மார்க்கத்தில், அருள்பெறில் துரும்புமோர் ஐந்தொழில் புரியும் தெருளிது. எனவே செப்பிய சிவமே என்றும், தங்கோ லளவது தந்துஅருட் ஜோதிச் செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே -திரு. 6 : 1: 1133 என் றும், o தன்பொரு ளனைத்தையுந் தன்னர சாட்சியில் என்பொரு ளாக்கிய வென்றணித் தந்தையே -திரு. 6 : 1135 என்றும், உலகுயிர்த் திரளெலாம் ஒளிநெறி பெற்றிட இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை -திரு. 6: 1 : 1577 என்றும், வானே மதிக்கச் சாகாத வான யெல்லாம் வல்லசித்தே வயங்க வுனையுட் கலந்துகொண்டேன் வகுக்குந் தொழிலே முதலைந்தும் நானே புரிகின் றேன்புரிதல் நானே நீயோ நானறியேன் நான் நீ யென்னும் பேதமிலா நடஞ்செய் கருணை = நாயகனே -திரு. 6 : 58 : 3