பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சன்மார்க்கமாகிய அருள் ஒளி நெறியை விரித் துரைக்கின் ருர். சுத்தசன் மார்க்கமானது ஆறந் தங்களுக்கு அப்பாற்பட்டது. ஆறந்தங்களாவன: வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், கலாந்தம், நாதாந்தம், யோகாந்தம் எனப்படும். நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்த முடனே நவில்கின்ற சித்தாந்த மென்னுமா றந்தத்தின்... -திரு. 6: 100: 17 இவ்வந்தங்கள் ஆ ண் ட வ னை அடைவதற்கு நம் முன்னுேர்கள் வகுத்த பாதைகள் ஆகும். ஆறந்தம் என்ற தலைப்பில் இவற்றைத் திருமூலர் வகுத்துரைக்கின்ருர். இந்த ஆறந்தங்களில் நுகர் தற்குரிய பேறுகளையெல்லாம் சுத்த சன்மார்க்கம் தன்னுள் அடக்கி நிற்றலின் இதனை ஆறந்த சன் மார்க்கம் என் பர். தவருத வேதாந்த சித்தாந்த முதலாச் சாற்றுகின்ற அந்தமெலாந் தனித்துரைக்கும் பொருளை இவருத சுத்தசிவ சன்மார்க்க நிலையில் இருந்தருளாம் பெருஞ்ஜோதி கொண்டறிதல் கூடும் -திரு. 6: 38: 90 என்பது காண்க. அன்றியும், வேதாந்தம் விரித்துரைக்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நிலை அனுபவங்களைத் தாம் பெற்றதாகக் கூறுவர். வேதங்கள் நாதம் வரை சொல்லும். நாதம் என்பது இங்கே அனுபவத்தானம். ஆகமங்கள் பரநாதம்