பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 என்றுங் கூறியவதனுல் ஆன்மா சிவகுணங்களைப் பெறுதல் மட்டுமின்றி சிவவடிவுற்று சிவமேயாகி எல்லாம் சிவமயமாய் பேதமற்று நிலைக்கும். சன்மார்க்கம் விளக்கும் சிவானுபவ மேல்நிலைகளே வேதாந்தம் சித்தாந்தம் முதலிய அந்தங்கள் புறங் கவியச் சொல்லவில்லை என்பர். இவ்வுண்மையை அடிகள், வேதாந்த நிலையாகிச் சித்தாந் தத்தின் மெய்யாகிச் சமரசத்தின் விவேக மாகி -திரு. 1 : 5 : 4. என்றும், சுத்தவே தாந்த மவுனமோ வலது சுத்தசித் தாந்தரா சியமோ நித்தநா தாந்த நிலையனு பவமோ நிகழ்பிற முடியின்மேல் முடிபோ புத்தமு தனைய சமரசத் ததுவோ -திரு. 6 : 4: 5 என்றும் விளக்கியவாறு கண்டுகொள்க. இனி, சிவதுரியாதீதத்தில் அகப்புணர்ச்சியுங் கூறப்படும். இத்தருணத்தில் பிற ப் பு ண ர் ச் சி விடயமில்லை ; மறப்பு உணர்ச்சியுமில்லை ; எங்குஞ் சிவபோகப் பெருஞ்சுகந்தான் பெருகிநிறையும். " நானதுவாய் அது என் மயமாய்ச் சின்மயமாய்த் தன்மயமான நிலை ' என்று கூறியருளுகின் ருர். புறப்புணர்ச்சி யென் கணவர் புரிந்ததரு ணந்தான் புத்தமுத நானுண்டு பூரித்த தருணம் சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி யவர்தாஞ் செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ