பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. சன்மார்க்கத் தெய்வம் சன்மார்க்க .ெ ம ய் ப் .ெ பா ரு ள் நெறியில் இராமலிங்க அடிகள் கூறும் தெய்வம் ஒன் றே. இதனை அருட்பெருஞ்ஜோதி என்றும் சுத்தசிவம் என்றும் கூறுவர். இத்தெய்வம், “ இயற்கை விளக்கம் என்கின்ற சத்தியஞானசபைக்கண்ணே இயற்கை உண்மை என்கின்ற சத்தியத்திருநடஞ் செய்தருளும்’ என் பார். மேலும், இதனே "இயற்கை யுண்மைத் தனிப்பெரும் பொருள் என்றும், இயற்கை விளக்கத் தனிப்பெரும் பதமென்றும், இயற்கையின் பத் தனிப்பெருஞ் சுகமென்றும் ' கூ று வ ர். பெருவிண்ணப்பத்தில், ' இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ வெளியில் இயற்கை விளக்க நிறைவாகி விளங்கிய அருட்பெருஞ்ஜோதி சொருபராய், இயற்கையின்ப நிறைவாகி ஓங்கிய சிவானந்த ஒருமைத்திருநடச் செய்கையை எல்லா உயிர்களுமின் பமடைதற் பொருட்டுத் திருவுளக் கருணையால் செய்தருளு கின்ற சர்வவல்லபராகிய தனித்தலைமைக்கடவுள்' என்றும் குறிப்பிடுகின் ருர். இம் மூன்று விளக்கங்களில் ஒப்புயர்வின்றி விளங்குகின்ற ஒருவரே ஆகிய க ட வு னி ன் இடமும், உருவமும், செயலும் கூறிய அடிகள் கடவுளின் இயல்புகளையுங் கூறுகின்ருர். சிறு விண்ணப்பத்தில் இவை காணப்படும்.