பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 அனுபவநிலைகட்கு ஏற்ப அருள் வெளி நான்கு வகைப்படும். அவை பரவெளி, பரம்பரவெளி, பராபரவெளி, பெருவெளி எனப்படும். இவ்வெளி களைத் தம்முள் அடக்கியது பெருஞ்சுகவெளி. இது சுகப்பெருவெளி என்றும் சிவவெளியென்றும் கூறப்படும். இவ்வெளிகளில்தான் சிவம் விளங்கு கின்றது என்பது பொருந்தாது. அருள்நிலை விளங்கு சிற் றம்பல மெனும் சிவ சுகாதித வெளி நடுவிலே -திரு. 6: 100: 1 திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர் அருள்வெளிப் பதிவளர் அருட்பெருஞ் ஜோதி -திரு. 6:1; 27 என்பன காண்க. மற்று, சிவம் விளங்கும் இடத் - திற்குச் சிவவெளி என்றும் அருள் விளங்கும் இடத்திற்கு அருள் வெளி என்றும் சொல்லுதல் பொருந்தும். ஒப்பற்ற ஒ ரு பெ ரு ங் கடவு ள் அவளுய், அவளாய், அதுவாய், இவை அலவாய், நவநிலை களிலும் நண் ணி இருக்கின் ருர். அவர் யாவுமிலார்; யாவுமுளார்; யாவுமலார்; யாவும் ஒன்றுறுதாமாகி நிற்பார் ; சுத்தசிவ துரியாதீத மேல்நிலையில் சுத்தப்பிரணவ ஞான தேகத்தில், சிவவெளியில் அனுபவம் ஆவார். அவர் ஒருவரே உருவராகியும்; அருவினராகியும், உருவருவினராகியும் இரு க் கின் ருர். அவர் த ம் மலரடி (திருவருள்)களைப் புகழ்ந்து பாடுமுகத்தான் சுவாமிகள் ஆண்ட