பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வள்ளற்பெருமான் வரலாறு நந்தமிழ் நாட்டின் நலமெலாந் திகழும் தில்லே யம்பதி சிதம்பரம். "திருவளர் திருச்சிற்றம்பலம் ஓங்கும் சிதம்பரம்’ என்று வள்ளற்பெருமால்ை இவ்வூர் வாழ்த்தப்படுகின்றது. அடிகள் கையெழுத் திடும்போதெல்லாம் சி த ம் ப ர ம் இராமலிங்கம் என்றே எழுதியுள்ளனர். கோயில் என்று கூறப் படும் இப்பதியில் எல்லாம்வல்ல இறைவனது திருச்சிற்றம்பல நடனம் வெளிப்பட்டது. ஆடல் செய்யும் அம்பலவனை அமைத்துக்காட்டும் அழகு இவ்வூர்ச் சிறப்பாகும். சிதம்பரத்திற்கு வடக்கே சற்றேறக்குறைய பத்துமைல் தொலைவில் மருதுார் என்னும் சிற்றுார் உள்ளது. இங்கே பத்தொன் பதாம் நூற்ருண்டின் .ெ த ா ட க் க த் தி ல் இராமையாப் பிள்ளே என்ற கணக்கர் ஒருவர் இருந்தார். அவர் நற்குண நற்செய்கை உடையவர். அவர் ஆறுமுறை மணக்க # நேரிட்டது மனைவியர் ஐவரும் ஒருவர்பின் ஒரு வராய் மகப்பேறின்றி இறந்தனர். ஆரும்முறையாக சின்னம்மை என்ற தெய்வத்திருமகளை மணந்தார். அந்த அம்மையார் சென்னைக்கு அடுத்த பொன் னேரி என்னும் சிற்றுரைச் சேர்ந்தவர். அவர் கட்குச் சபாபதிப்பிள்ளை, பரசுராமப்பிள்ளை, சுந்தரம் பாள், உண்ணுமுலையம்மாள் எ ன் ற நால்வருந் தோன்றி வளர்ந்துவந்தனர். இந்நாளில் ஒரு தவ முதிய சிவயோகியார் இவர்கள் வீட்டிற்கு உணவு