பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 வேண்டி எழுந்தருளினர். அவ்வடியவருக்கு அமு தருத்தி விருந்துபுரந்து மகிழ்ந்தார் சின்னம்மை யார். அகங்குளிர்ந்து மகிழ்ந்த சிவயோகியார் அவ் வம்மைக்குத் திருநீறுநல்கித் தம்போல் ஒரு மகன் பிறப்பான் என்று வாழ்த்தினர். அவர் வாழ்த்திய வண்ணம் அம்மைக்கு ஐந்தாவது பிள்ளையாக நமது வள்ளலாகிய பி ள் 8ள ப் பெ ரு ம | ன் தோன்றினர். சிவயோகியார் வரவு காரணப்பட்டு தவத்திரு வாளர் கந்தசாமிப்பிள்ளையவர்களாலும் பிறராலும் கூறப்படுகின்றது. தோற்றத்திற்கு முதற்காரணம் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளே என்று அடிகள் குறிப்பிடுகின்றனர். மக்களது அகங்கறுத்து அன்பு குறைந்து அறியாமை பெருகிவந்த நாளில் அன்பு காட்டி அறிவு கொளுத்தி அனைவரையும் சன் மார்க்கத்தில் அடைவித்திடும்பொருட்டு ஆண் டவன் அடிகளைத் தோற்றுவித்தான். எல்லோரும் இகத்தே பரத்தைப்பெற்று மகிழ்வதற்கு இறைவ ல்ை வருவிக்கப்பெற்றேன் என்று அடிகள் தம் வரவு குறித்துப் பாடுகின் ருர். அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையுஞ் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திட அவரும் இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே யெனையிந்த யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே - -திரு. 6:93:9