பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 உடன்பிறந்தார்களுடன் மருதுாரைவிட்டு நீங்கிப், பொன்னேரியில் உள்ள தங்கள் தாய் பிறந்த பாட்டியார் வீட்டிற்கு வந்து சிலநாள் தங்கிப் பின் சென்னையம்பதியை அடைந்தனர். அந்நாளில் சென்னையில் மிகப்பெரிய உரையாசிரியராக விளங் கிய மகாவித்துவான் காஞ்சிபுரம் சபாபதி முதலி யாரிடம் சபாபதிப் பிள் 2ளயும், பரசுராமப் பிள்ளே யும் கல்வி பயின்றனர். சிலநாள் செல்ல, சபாபதிப் பிள்ளை புராணப் பிரசங்கஞ் செய்து பொருளிட்டிக் குடும்பத்தைப் புரந்துவந்தார். இளைய பிள்ளே யாகிய இராம லிங் கத் தி ற்கு ஐந்தாம் ஆண்டு தொடங்கவும் முன்னவர் எழுத்தறிவித்து அன் புடன் வளர்த்துவந்தார். சிலநாள் சென்றபின் இளவலைத் தமது ஆசிரியராகிய சபாபதி முதலியா ரிடம் விடுத்துக் கல்விபுகட்டும்படி வேண்டினர். நாலைந்துநாள் பாடங்கேட்டுவரும்போதே பிள்ளைப் பெருமான் மாலையில் சென்னைக் கந்தசாமிக் கோயி லுக்குச் சென்று அருமையான பாடல்களைப் பாடி வருவாராயினர். கல்வியெலாங் கற்பித்தாய் நின்பால் நேயம் காண வைத்தா யிவ்வுலகங் கான லென்றே ஒல்லும்வகை யறிவித்தாய் உள்ளே நின்றென் உடையானே நின்னருளும் உதவு கின்ருய் இல்லையெனப் பிறர்பாற்சென் றிரவா வண்ணம் ஏற்றமளித் தாயிரக்க மென்னே யென்னே செல்வவருட் குருவாகி நாயி னேனைச் சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே -திரு. 5: 40:4