பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 என்று பாடுவதுங் காண்க. ஏதோ இவ்வாறு பாடு வதைக் கேள்வியுற்ற ஆசிரியர் சபாபதி முதலியார் பிள் ஆளப்பெருமானது அதிதீவிரப் பக்குவத்தை ஆராய்ந்து உணர்ந்து சாக்குப் போக்குச் சொல்லிப் பாடஞ் சொல்லாமலே காலம்போக்கினர். இவரும் கல்வி பயிலச் சரியாகச் செல்வதில்லை. தம்பியின் தரமும் மனப்போக்கும் அறியாத சபாபதிப் பிள்ளே வீணுள் கழித்துத்திரியும் தம்பி வீ ட் டி ற் கு ள் நுழையக்கூடாதென்றும், உணவு கொடுக்கக் கூடாது என்றும் தனது மனைவியாகிய பாப்பம்மா ளிடம் கடுமையாக எச்சரித்தார். பசிக்குந்தோறும் இளம் பிள் ஆளப்பெருமான் யாருக்குந் தெரியாமல் பின்புறமாக வீட்டிற்குள் வந்து தமது அண்ணி யார் அன்பினுல் உணவுண்டு வெளியேறுவார். ஒதாமல் உணர்ந்தார் இங்ங்னமாக நாள் பல செல்லவும் தந்தை யாரின் திதி வந்தது. சபாபதிப் பிள்ளை உற்ருர் உறவினரையெல்லாம் அ ைழ த் து அறுசுவை உண்டி கொடுத்து அனுப்பினர். பாப்பம்மையார் சிறிய பிள்ளையார்மட்டும் உணவு அருந்த வில்லையே என்று வருந்தி அவரது வரவெதிர் நோக்கியிருந்தார். பொழுது சாய்ந்தது; நள்ளிரவு மாயிற்று. இளையபெருமான் வழக்கம்போலப் பின் புறமாக உட்புகுந்தார். எல்லாரும் உண்டு எஞ்சிய ஆறிப்போன உணவை அண்ணியார் அவருக்குப் படைத்து மனம் உடைந்து அழுதார். கண்ணிர் விட்ட அண்ணியாரைக் கண்ணுற்ற இளைய