பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 கொண்டவர். தன்னை ம தி யா தி ரு த் த ல் என்னும் கரணவொழுக்க நெறிநின்றவர். தம்மை எவ்வளவு தாழ்த் தி க் கூறிக்கொள்ளமுடியுமோ அவ்வளவுங்கடந்து தாழ்த்திக் கூறிக்கொண்டார். வெள்ளிய ஆடை முழங்காலுக்குமேல் தரித்திருந் தார். மெய்யுறக் காட்ட வெருவி வெண்துகிலால் மெய்யெலாம் ஐயகோ மறைத்தேன்’ என்பதற் கேற்ப ஞானதேகம் ஒத்திலங்கிய தமது தேகம் தெரியாமல் முக்காடிட்டு மறைத்துக்கொண்டார். வீதிகளில் ஒரமாகச் செல்வார். கைகளைக் கட்டியே நடந்தார். திண்ணையிலாவது உயர்ந்த ஆசனத்தி லாவது, காலின் மேல் கால்போட்டாவது உட் கார்ந்து வீண்பேச்சுப்பேச ஒருவருடனும் ஒருப் படார். உலகியல் உணர்ச்சியுற்ற நாள்தொட்டு சிலசமயங்களில் உற்றவர், நண்பர், பெற்ற தாய் முதலியோர் தம் வாட்டம் பார்ப்பதற்கு அஞ்சிப் பேருணவு உண்டனன் என்று கூறியுள்ள்ார். எனினும்,“நண்பகல் பலவுடன் கழிந்த உண்டியர்'; இரண்டு அல்லது மூன்று நாளேக்கு ஒருமுறை உண் பார். அப்போதும் சிலகவளத்தோடு திருப்தி யடைவார். இரண்டு மூன்று மாதம் உபவாசம் எடுப்பார். அப்போது கொஞ்சம் சர்க்கரை கலந்த நீரையன்றி வேருென்றுங் கொள்ளமாட்டார். இவர் இ8ளப்பாறினதாக எவரும் அறியமாட்டார். இவர் உரு வ த் தி ல் சாதாரண உயரமுள்ளவர் ; மெலிந்த சரீரமுடையவர்; எலும்புகள் தெரியும்; ஆயினும் வீரியபலமுள்ளவர் ; நிமிர்ந்த தேகம் ; தெளிந்த மா நிற மேனியர்; நீண்ட மெல்லிய நாசி யுடையவர் ; பரந்த ஒ விரி ப ர க் கு ம் கண்களை