பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 சுவாமிகளிடம் மாணவரான போது இவருக்குப் பதினேழு வயது. சுவாமிகளுக்கு ஒன்பது ஆண்டு இளையவர். பெங்களுரைச் சேர்ந்த சீரங்கம்மாள் என்பவரை மணந்து அங்கேயே சிலகாலம் வசித்து வந்தார். அடுத்தடுத்து சென்னைக்கு வந்து தமது ஆசிரியரை வழிபடுவார். சுவாமிகள் கருங்குழி யிலும் வடலூரிலும் தங்கிய நாளில் இவர் தன் மனேவியும் மகன் திருநாகேசுவரனுமாகச் சுவாமி களுடன் உறைந்துவந்தார் என்ப. சுவாமிகள் தாம் மறைவதற்கு ஓராண்டிற்கு மு ன் ன ரே இவரை அழைத்து, “ இங்கிருந்தால் நுமக்குப் பெரும்புகழ் உண்டாகும்; சென்னைக்குச் செல்வீ . ராக ' என்று பணித்தார் என்றும், அதனல் சுவாமிகள் சிவானுபவம் பெற்று மறையும்போது உடனில்லை என்றும் அவரது இரண்டாம் மனேவி யின் வயிற்றுதித்த மகனர் தவத்திருவாளர் செங்கல்வராய முதலியார் 1944-ஆம் ஆண்டில் வடலூரில் கூறினர். திருவொற்றியூர் நம்பெருமான் திருஒற்றியூருக்குச் செல்லும் போதெல்லாம் தேரடித் தெருவழியாகச் செல்லாது நெல்லிக்காய்ப் பண்டாரச் சந்து வழி யாக ச் செல்வது வழக்கம். காரணம் அச்சந்தில் நெல்லிக் காய் பண்டாரம் என்ற அன்பர் குடியிருந்தார். அவர் வீட்டில் சுவாமிகள் அன்பர்களுடன் உண்பதுமுண்டு. ஒருநாள் பெருமான் தேரடி வீதியாய்ச் சென்றனர். அங்கு நெடுநாளாகத் திண்ணை மீதிருந்த நிர்வாண சந்நியாசி ஒருவர்