பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 இச்சையின்றி நுகருமியல்பையும் அறியமுடியாத குடும்பத்தினர் ஒருநாள் மணமக்களை மணவறை யுட்படுத்தினர். நம்பெருமான் திருவாசகம் கையில் கொண்டு சென்று அவ்வம்மையை நோக்கித் திருவிளக்கைத் தம்பால் எடுத்துவர வேண்டினர். அம்மையார் ஒன்றும் செய்யாமல் மெளனமாய் நிற்கவும், சுவாமிகள் தாமே திருவிளக்கை எடுத்து வைத்துக்கொண்டு விடியவிடியவும் திருவாசகத் தேன் நுகர்ந்து இன் புற்றிருந்தார். இங்ங்னமாகச் சிலநாள் கழியவே குடும்பத்தினர் தம்முயற்சி பயனற்றதேயென்று வருந்தினர். பேரறிவு வண் ணமாய்க் காலங்கடந்தவர்களாய் தாம் வந்த வேலையைப் பார்ப்பதே பொருளாய் நிலைத்து நிற்கும் மேதாவிகளைச் சிற்றின ஆன்மாக்கள் தம் அறிவாற்றல் கொண்டு அளக்க முனைவது எள்ள ளவும் மு. டி யா த காரியமென்று சுவாமிகளின் இந்நிலையை M. கந்தசாமி முதலியார் கூறுவது பொருந்தும், தமிழாசிரியரானது ஒழிவிலொடுக்கம் என்னும் சிறந்த மெய்ப் பொருள் நூல் கண்ணுடைய வள்ளலால் இயற்றப் பட்டது. இதற்குத் திருப்போரூர் சிதம்பர சுவாமி கள் 1851-ஆம் ஆண்டில் அந்நூலின் சிறப்புப் பாயிர வெண்பாவிற்கு விருத்தியுரையும், சிதம்பர சுவாமிகளின் உரைக்குறிப்பும் எழுதியருளினர். இந்நூல் வேதாந்தத்திற்கும் சித்தாந்தத்திற்கும் பொது நூலாகும். சுவாமிகள் எழுதிய விருத்தி யுரை கற்றவர் காமுறும் கவின்மலர்ச் சோலேயாக