பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 நூற்பெயர் இலக்கணம் எழுதித் தெளிவுபடுத் தினர். இதனுடன் வழிபடு கடவுள் வணக்கப் பாட்டுரையையும் எழுதியுள்ளனர். செந்தமிழ் நடையில் அமைந்த இவ்விளக்கம் வி ைவிடை களைக் கொண்டதாய் இலக்கண நுட்பஞ் செறிந்த தாய்க் கற்றவர் .ே பா ற் று ம் நயனுடையதாய் உள்ளது. சிதம்பரத்திற்குச் சென்றது பிள் ஆளப்பெருமான் தமது முப்பத்திரண்டாம் ஆண்டில் (1855) சிதம்பரத்திற்குப் புறப்பட்டார். அக்காலத்தில் இரயில் இல்லாமையால் வண்டிப் பாதையாக சிதம்பர சுவாமிகள், சடைச் சுவாமி கள், வீராசாமி நாயக்கர், தொழுவூர் வேலாயுத முதலியார் முதலிய அன்பர்களுடன் புறப்பட்டனர். புதுச்சேரிக்கு வந்து அங்கிருந்த விசுவநாத அய்யர் முதல்ான அன்பர்கள் வேண்டுகோட்கிணங்கிச் சிலநாள் புதுவையில் தங்கினர். கேட்டறியாத அரிய பெரிய உண்மைகளை விளக்கிவந்தபடியால் கூட்டம் வலுத்துவந்தது. ஒருநாள் சீனிவாசவரதாச் சாரியார் என்பவர் தருமலிங்கச் செட்டியாருக்குப் பாடஞ்சொல்லிக்கொண்டிருந்தபோது அவர்கள் விரும்பியவண்ணம் பிள்ளைப்பெருமான் பல பெரிய நுண்பொருள்களை விளக்கினர். சிலநாள் சென்றபின் சிதம்பரம் வந்தடைந்து திருவம்பல முடையார் திருவாயிலே அடைந்து அஞ்சலி செய் தார். எவ்வுயிர்க்கும் நிலைக்களமாகிய சிவபதியைக் கண்டார் ; விழுந்தார் : எழுந்தார் ; விம்மினர் ; கனிந்தார் ; கலந்தார் தனிப்பெருங்கருணைத்