பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 வேதாகம சுத்த சைவ சித்தாந்த சமயாசாரிய பீட மான மதுரை திருஞானசம்பந்தமூர்த்திகள் ஆதீன கர்த்தராக விளங்கினர்கள். அவர்கள் திருவருட்பா திருமுறைகளுக்குச் சி ற ப் பு ப் பா யி ர ம் செய் தருளினர். "தண்ணிர் விளக்கெரித்த தன்மைபோல் மாந்தர்கள்தம் உண்ணிர் சிவம்விளங்க ஓங்குவிக்கும்-கண்மணியாம் நங்கள் இராமலிங்க னல்லருட் பாமுறையைத் துங்கமுற மாணு தொழு ” இவ்வெண்பாவில் இராமலிங்கப் பெருமான் த ண் ணி ர் .ெ கா ன் டு விளக்கெரித்ததுபோல மக்களின் உள்நீர் (அன்பு) கொண்டு அவர்களை யெல்லாம் சிவம்விளங்க ஓங்குவிக்கும் வல்லபம் உடையது அருட்பா திருமுறை என்றும், அடிகளே நமது கண்மணியாகிய இராமலிங்கன் என்றும், க ண் ேபால இன்றியமையாதவர் என்றும், கண்ணின் மணிபோல அணித்தானவர் என்றும், அவருடைய அருட்பா திருமுறைகளைத் தொழுவா யாக என்றும் சிதம்பரசுவாமிகள் மாணவனே நோக்கிப் பாராட்டிக் கூறுகின்ருர். உண்ணிர் என்பது போகாப்புனல் என்பாருமுளர். இந்த அற்புத நிகழ்ச்சியைத் தாம் செய்ய வேண்டுமென்று அடிகள் நி னே க் க வி ல் லே. அற்புதம் தானே நிகழ்ந்தது. சுவாமிகளிடம் பல பேர் வந்தார்கள்; மாணவராவதற்கன்று. இவர் அற்புதம் செய்கின் ருர் என்று கேள்விப்பட்டு பலரும் வேடிக்கைபார்க்க வந்தார்கள். அவர் களுக்கெல்லாம், எவ்வுயிரும் தம்முயிர்போல்