பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 இடமாகவும் இ ரு ந் த து இவ்வெளி. அதனல் வடலூர் என்றும், பார்வதிபுரம் என்றும் உலகியற் பெயருடையதும், உத்தரஞான சிதம்பரம் என் றும், உத்தரஞான சித்திபுரம் என்றும் திருவரு ளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்புப் பெயர்களை உடையதுமான இ ல் வி ட ம் தருமச்சாலையை بالایی : قـاق இைtைக்கும் இடமாக இருந்தது. சுவாமிகள் விரும்பியபடி வடலூர் மக்கள் சுவாமிகள் பேரில் எண்பது காணி நிலத்தை இனுமாகப் பட்டா செய்து கொடுத்தனர். பனே மரங்களே நிறுத்தி விழல்வேய்ந்த பெருங் கொட்டகை அமைத்துப் பிரபவ ஆண்டு வைகாசித் திங்கள் பதினேராம் நாள் (1867-மே 23) வியாழக் கிழமை அன்பு விளக்கேற்றிச் சமரச சுத்த சன் மார்க்க சத்திய தருமச்சாலை தொடங்கப்பட்டது. சுவாமிகள் சீவகாருண்ய ஒழுக்கம் முதல்பாகத்தை எழுதி சிதம்பரம் வெங்கடசுப்பு தீட்சதரைக் கொண்டு வழிபாடு செய்து வாசிக்கச்செய்தார். தருமச்சாலைச் செங்கல் கட்டிடத்திற்குக் கால் கோள், சமரச வேத பாடசாலை, வைத்தியசாலை, உபகாரச்சாலை, உபாசனுசாலை, விவகாரசாலே முதலியவற்றை அமைப்பதற்கு ேவ ண் டி ய ஏற்பாடுகளைத் தொடங்கினர். அன்று முதல் மூன்று நாளைக்கு நாள் ஒன்றுக்கு பதினுயிரம் பேர்களுக்கு மேல் அன்னதானம் செய்வித்து. மகிழ்ந்தனர். எப்போதும் சாலையில் அடுப்பு புகைந்துகொண்டே இருக்கவேண்டும் என்று. பெருமான் கட்டளையிட்டனர். -