பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 மிங்வுடம்பு அழியாப் பொன் வடிவமாயிற்று ’’ என்று சுவாமிகள் தாம் பொன் வடிவுற்ற செய்தி யைக் கூறுகின்றர். இது சுத்த உடம்பு, சுத்த தேகம், அன்புருவம், சுவர்ண தேகம் என்றெல்லாம் கூறப்படும். அடிகளார் முதலில் சைவசித்தாந்தச் செந் நெறியில் அழுந்திய பற்றுடையவராக இருந்தார் கள். சைவ சமய குரவர்களாகிய ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகிய நால்வரையும் போற்றிப் பாடியுள்ளார். அத்திருப் பாடல்கள் நான்காம் திருமுறையில் உள்ளன. அவற்றுள் மணிவாசகப் பெருமானையும் அவர்தம் திருவாசகத்தையும் போற்றுவதை ஆளுடைய அடிகள் அருள்மாலையில் காணலாம். இவையன்றி மணிவாசகப் பெருமானைப் பாடிய பல பாக்கள் முதல் ஐந்து திருமுறைகளிலும் ஆங்காங்குக் காணப்படுகின்றன. மணிவாசகர் பெருமான் திரு வருளால் சிறப்பாகப் பெற்ற பேறு ஒரு திருப்பாட லில் காணப்படுகின்றது. எடுத்த எடுப்பில், வான் கலந்த மாணிக்கவாசக ’’ என்று விளிக்கின் ருர். மணிவாசகர் மண்ணிற் கலவாமல் வானிற்கலந்த செய்தி ஈண்டு விளக்கப்படுகின்றது. திருவாச கத்தை உண்மையாகக் கலந்து பாடி அனுபவித்த வரிகளில் தலைசிறந்தவர் இராமலிங்க அடிகள். அவர் அதிற் கலந்து பாடுங்கால் அவரது ஊனும் உயிரும் உணர்வும் ஒன்றிநின்றன. திருவா சகமெனுந் தேனைப் பருகி அனுபவித்த l. ഔbr ഞഥഞL,