பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 ரிடம் மறுப்புக்கு மறுப்பு எழுதவேண்டி வற்புறுத் தினர். அவர் போலி அருட்பா மறுப்பென்னும் குதர்க் காரண்ய நாசமகாபரசு ’ என்னுமோர் புத்தகம் எழுதி, சமரச வேத சன்மார்க்கத்தினர் இயற்றியதாக வெளியிட்டார். இதில் கண்டனங் களுக்குக் கண்டனம் சற்று வன்மையாகவே இருந் தது. அதற்கு எதிராக நாவலர் கட்சியினர் “ குதர்க் காரண்ய நாசமகாபரசு கண்டனம்' எழுதினர். வள்ளலார் கட்சியினர் திருவருட்பா துாஷணேப் பரிகாரம் ’ என்ற நூலெழுதி வெளியிட்டனர். இதல்ை வெகுண்ட நாவலரும் அவரைச் சார்ந்த வர்களும் அரசாங்க வாயிலாக வழக்கெடுத்தனர் என்பர். திருவருட்பா ப தி ப் பி ல் இனி அச்சில் பதிப்பிக்கப்படுபவை என்று பல நூல்கள் காணப் படுகின்றன. அவற்றுள் சில பின் அச்சாயின என்பர். வடலூருக்குத் தெற்கே சுமார் மூன்று மைல் தொலைவில் உ ள் ள து மேட்டுக்குப்பம் என்ற சிற்றுார். அன்பர்களின் ஒத்துழைப்பால் சுவாமிகள் 1870-ஆம் ஆண்டில் மேட்டுக்குப்பம் சென்று ஊர்ப்பொதுவில் ஒரு குடிசை அமைத்து அச்சிறு குடிலில் தங்கியிருந்தார். அதற்குச் சித்திவளாகம் என்றுபெயர். அங்கிருந்து வடலூருக்கு வருவதும் திரும்பச் செ ல் வது மாக இருந்தார். வடலூரி லிருந்து மேட்டுக்குப்பத்திற்கு குறுக்குப் பாதை யாகச் சென்ருல் இரண்டு மைல்தான் இருக்கும். குறுக்குப் பா ைத யி ல் ஓர் ஒடையிருக்கிறது.