பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231 சிறிதுதுரம் சென்ருல் ஒரேவெளியாக இருக்கும். கோடைக் காலத்தில் ப க லி ல் அப்பாதை யாகப் போனுல் வெப்பம் தாங்கமுடியாது. அந்: நாளில் இ ந் ந டு .ெ வ ளி யி ல் ஒரு மாமரம் இருந்தது. அம்மரம் இப்போதில்லை. இப்பாதை யில் அடிகள் வடலூருக்குச் சென்று வருவது வழக்கம். கோடையில் ஒடையின் தீஞ்சுவைத் தண்ணிரும், இம்மர நிழலும் அடிகளின் உள்ளத் தைத் கவர்ந்தனபோலும். ஆகவே, கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே -திரு. 6 :38 : 2 என்ற அருமைத் திருப்பாடலைப் பாடுவது காண்க. ஞானசபை o உத்தரஞான சிதம்பரமாகிய வடலூரிலே தம்முள்ளத்தில் கண்டவண்ணம் ஞ |ா ன ச ைப கட்ட வள்ளற்பெருமான் திருவுளங்கொண்டார். சபை நிர்மாணப் படம் ஒன்றைத் தம் கரத்தால் வரைந்து தந்தனர். இப்படம் 1920-ஆம் ஆண்டு வரை வடலூரில் காணப்பட்டதெனவும், பின்னர் அதைக் காணவில்லை எனவும் கந்தசாமி முதலியார் கூறுவர். சபை கட்டும் வேலை பிரசோர்ப்பத்தி ஆண்டு (1871) ஆனி மாதம் தொடங்கப்பட்டது. அதே ஆண்டு தைமாதத்திற்குள் முடிய வேண்டு மென்று அடிகள் தமது அன்பர்களிடம் கூறினர். சபை எண்கோணத்தில் தாமரை மலர் விரித்தாற் போல அமைக்கப்பட்டது.