233 அருள் உள் ளத்தில் பதிந்த நினைவு. அம்மரத்தை அதே நேரத்தில் வடலூரில் தோன்றச் செய்தால் அற்புதமாகிவிடும். அதனுல் அடிகள் அதே மரத்தின் மேல் சென்னை மரவாடியில் தோன்றினர். இதற்கென்ன விளக்கம் ? அடிகளின் நினைவு துாய்மையானது; திண்ணிையது ; மாசற்ற உளத்தில் எழுந்து பதிந்தது. இதைச் சுத்த சங்கல்பம் என்று கூறுவர். எண்ணியாங்கு எய்தினர். கொடிமரமும் வந்துசேர்ந்தது. ஞான சபையின் உள்ளே அமைப்பதற்குச் சென்னையிலிருந்து ஐந்தடி உயரமுள்ள சீமைக் கண்ணுடியை (English Glass) வரவழைத்தனர். அதைச் சித்திவளாகம் எனும் தமது சிறுகுடிசை யில் வைத்து ஒரு மண்டலம் பூசித்தார் என்ப. அதன்பின் தாம் வரவழைத்து வைத்திருந்த சபாபதி சிவாச்சாரியார் என்னும் அந்தணரைக் கொண்டு அதை ஞானசபையில் வைத்தனர். அதற்கு முன்புறத்தில் திரு அருள் விளக்கு வைத்துப் பூசை செய்யவேண்டிய பொதுவும் சிறப்புமான விதிகளை விளக்கி அவருக்கு உணர்த் திர்ை. ஞான சப்ைக்குச் சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்று பெயர். இதைச் சுற்றிலும் ஒரு இருப்புச் சங்கிலி அமைத்தார். இதைத் தாங்கி நிற்பதற்கு 52 கட்டைகள் ; ஒவ்வொரு கற்கட்டை யிலும் வேற்படை போன்ற இருப்புப்பட்டை உள்ளது. கட்டைகளை அமைத்த முறை 53 விரிகோணமாக ஞானசபையைச் சுற்றி வளைத் துள்ளது. மதிற்கவர்வரை ஒரு பிரகாரம்; மதிற்
பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/246
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
